Thursday, 31 December 2015
Friday, 11 December 2015
INDIAN DATA ECONOMICS NEWS(11/12/2015)
1)October consumer durables output growth at 42.2% vs 8.4% cap goods at 16.1% manufacturing at 10.6% mining at 4.7% MoM.
2)October IIP growth improves to 9.8% compared to 3.6% in September.
3)government imposes anti dumping duty ranging from 5-57% on cold rolled steel for 5 years
4)National green tribunal directs centre &state government not to buy any diesel vehicles for department use.
Friday, 27 November 2015
27/11/2015 EVENING NEWS
INDIAN MARKET
Sensex ends above 26000 up 170 pts despite weak global cues. Nifty above 7900 .banks, it,infra lead.
*China regulator banks. Brokers from financing with derivatives.
Thursday, 26 November 2015
TODAY(27/11/2015) STOCK NEWS
* sensex reclaims 26000,nifty hits 7900 on 1st day october series. Tata motors. Leads Itc drags
*Rupee open lower by 9 paise at 66.65/$ compared to 66.56/$ in previous session. Tap here to read more
*coal india, Ashok leyland, videocon,Reliance infra,Forts health, tap to read here.
Wednesday, 25 November 2015
TURKEY SHOOTS DOWN "RUSSIAN JET" NEAR BORDER
Turkish F16 jets shot down a military aircraft. Which media reports said wsa. Russian. Near the Syrian border after it violated Turkish airspace. On Tuesday ,a Turkish military official said.
The two pilots ejected before the aircraft crashed in latakia,Syria, and operations to rescue them were underway.
The Russian defense ministry said it crashed because of a ground attack.
Tuesday, 10 November 2015
பிரதமர் மோடியின் தங்கத் திட்டங்கள்...யாருக்கு லாபம்?
மோடியின் தங்கத் திட்டங்கள்... யாருக்கு லாபம்?
மான் கீ பாத்...
நமது பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு அகில இந்திய வானொலி மூலம் பதில் அளிக்கும் நிகழ்ச்சியின் பெயர் இது. அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முக்கியமானதொரு கருத்தைச் சொன்னார். ‘
‘கோல்டு டெபாசிட் மற்றும் கோல்டு காயின் திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறோம். நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தங்கம் என்பது பிரிக்க முடியாதபடிக்கு இரண்டற கலந்துவிட்டது. நெருக்கடி யான நேரங்களில் சாதாரண மக்களுக்கு தங்கம்தான் மிகப் பெரிய பொருளாதார பலமாக இருக்கிறது. தங்கத்தில் பணத்தைப் போட்டுவிட்டு அதை வெறுமனே வைத்திருப்பது இந்தக் காலத்துக்கு சரியாக வராது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தியாக தங்கமானது மாற்றப்பட வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி இப்படி பேசியதைத் தொடர்ந்து, இனி தங்கத்தை நகைகளாக வாங்குவதைவிட, கோல்டு பாண்டுகளாக வும், காயின்களாகவும் வாங்கினால் என்ன என்கிற கேள்வி மக்களிடம் பிறந்துள்ளது. http://sivakasiteacherkaruppasamy.blogspot.com
பிரதமர் மோடி அறிவித் திருக்கும் இந்த தங்கத் திட்டங்கள் எப்படிப்பட்டவை, இவற்றின் முக்கிய அம்சங்கள் என்ன, இந்தத் திட்டத்தினால் என்ன நன்மை, யாருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது முக்கியமான கேள்வி. இந்த கேள்விகளுக்கான விளக்கமான பதில் இதோ... கோல்டு பாண்டு ஸ்கீம்! மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இருக்காது. ஆண்டுக்கு 300 டன் அளவுக்கு வாங்கப்படும் தங்கத்துக்கான பணம் மிச்சமாகும். இதனால் தங்கம் இறக்குமதி குறைவதால் ரூபாய் மதிப்பு ஓரளவு குறையாமல் தடுக்கப்படும். இந்த நவம்பர் 5 முதல் 20 வரை இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். தங்கம் வாங்க விரும்புகிறவர்கள் இந்த திட்டத்தில் 2, 5, 10, 50 மற்றும் 100 கிராம் அளவு யூனிட்டுகளாக தங்கத்தை பாண்டாக வாங்க முடியும். இந்த பாண்டின் முதிர்வு காலம் 8 வருடம் ஆகும். ஆனால், 5 வருடங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறலாம். இதை வங்கியில் அடமானம் வைக்கலாம். இந்த பாண்டுகள் நிதிச் சந்தைகளில் வர்த்தகமாகும் என்பதால் இவற்றை ஒருவர் முதிர்வு காலத்துக்கு முன்பே விற்க முடியும். இந்த பாண்டுகள் வங்கி, வங்கி அல்லாத நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு நபர் 500 கிராம் தங்கம்தான் வாங்க முடியும். இந்த பாண்டினை இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே வாங்க முடியும். வட்டி விகிதம்! இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு 2.75% வட்டி உண்டு. இந்த வட்டி 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். பாண்டு வாங்கும்போது இருக்கும் தங்கத்தின் விலைக்குத்தான் வட்டி கிடைக்கும். கோல்டு பாண்டுகள் காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எந்த வடிவத்தில் வாங்கி வைத்துக்கொள்ள விரும்புகிறார்களோ, அந்த வடிவத்தில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், கேஒய்சி விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த பாண்டுகளை அடமானம் வைத்து கடன் வாங்கலாம். தங்க நகை கடனுக்கு ஆர்பிஐ விதித்துள்ள நடைமுறைகள் இதற்கும் பொருந்தும். அதேபோல் தங்கத்துக்கு உள்ள மூலதன ஆதாய வரி விதிப்பும் வட்டிக்கு வரி விதிப்பும் உண்டு. http://tamilnumaralogy.blogspot.com இந்தத் திட்டத்தின் முடிவில் பணமாக மட்டும்தான் பெற முடியும்; தங்கம் தரப்பட மாட்டாது. முதிர்வுத் தொகையானது அன்றைய தங்கத்தின் விலை அளவில் இருக்கும். முதிர்வுத் தொகையானது எதிர்பாராதவிதமாக வாங்கிய விலையைவிட குறைவாக இருந்தால், முதலீட்டை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடரலாம். இந்தத் திட்டத்தில் லாபமோ, நஷ்டமோ முதலீட்டாளர்களையே சாரும்.
கோல்டு காயின்! மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வருகிற தீபாவளியின்போது வெளியிடப்படும் என்றும் சொல்லி இருக்கிறார். ‘‘எத்தனை நாளைக்குத்தான் நாம் வெளிநாட்டினர் தயாரித்த தங்க நாணயங்களை பயன்படுத்துவோம்? உள்நாட்டிலேயே நாம் ஏன் தங்க நாணயங்களை தயாரிக்கக் கூடாது?
எனவேதான், வருகிற தாந்தராஸ் முன்பே இந்த தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தப் போகிறோம்’’ என்று சொல்லி இருக்கிறார். தங்க நாணயம் என்பது புதிய விஷயம் கிடையாது. சில ஆண்டு களுக்குமுன், வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் தங்க நாணயங்கள் மற்றும் பார்களை விற்பனை செய்தன. இதன் விலை நகைக்கடை விலையைவிட அதிகமாக இருந்தது. ஆனால், அந்த காயின்/ பார்களை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்ளாததால், கடைகளில் விற்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் கடைகள் விலையைக் குறைத்துக் கேட்கும் நிலை உருவானது. மேலும், அவற்றை அடமானம் வைப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தது. அவசரத் தேவைக்கு அவற்றை விற்க நினைத்தவர்கள் நஷ்டத்துக்கு விற்பனை செய்தார்கள். அதன்பின்பு ஒருகட்டத்தில் காயின் / பார் விற்பனையை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் நிறுத்தியது. இப்போது மீண்டும் அரசாங்கமே தங்க நாணயங்களை விற்க முடிவு செய்திருக்கிறது. தங்க நாணயங்கள் விஷயத்தில் கடந்த முறை இருந்த சிக்கல்கள் இந்த முறையாவது இல்லாமல் இருந்தால் நல்லது. சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைகள் தங்க நாணயங்களை விற்பனை செய்தன. அதற்கு தடை விதித்தது அப்போதிருந்த அரசு. இப்போது மீண்டும் அரசே தங்க நாணயங்கள் விற்க முடிவு செய்திருக்கிறது. இது எந்த வகையில் சரி என கேள்வி எழுப்புகிறார் கோவை நகைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம். ‘‘இப்போது கோல்டு காயின்களை எம்எம்டிசி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம். http://sivakasipeople.blogspot.com பிரதமர் கூறியது போல, தங்க காயின்கள் விற்பனை செய்வதனால், எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. ஏனெனில் எம்எம்டிசி நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுதான் காயின்களை தயாரிக்கிறது. எனவே, காயின் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் நம் நாட்டுக்கு கிடைக்குமா என்பது கேள்வியே. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. மேலும், தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் வேலைவாய்ப்பு வெகுவாக குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, காயின்கள் அதிகமாக கிடைக்கவில்லை என்பதால், பொதுமக்கள் ஆபரணங்களை முதலீடு நோக்கில் வாங்கி வைத்தார்கள். இப்போது அரசே காயின் விற்கும்போது அதிகமான மக்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் நகைக் கடைகளில் 10-15% விற்பனை குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் இந்தப்http://sivakai.blogspot.blogspot.com பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார். மத்திய அரசு கொண்டுவரும் இந்தத் திட்டங்களினால் நகைக்கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என கோல்டு ஜூவல்லரியின் இயக்குநர் பவேஷிடம் கேட்டோம். “அரசின் இந்தத் திட்டங்களினால் நகைக்கடைகளில் தங்க நகை விற்பனை யில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அரசின் திட்டங்களில் முதலீடு மட்டும்தான் செய்ய முடியும். ஆனால், நகை வாங்க வேண்டுமெனில் கடைகளுக்குத்தான் வரவேண்டி இருக்கும். எனவே, எங்கள் விற்பனை எப்போதுமே குறையாது” என்றார். ஆக மொத்தத்தில், அரசு தங்களுடைய நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கு தங்க பாண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தங்கத்தை கோல்டு பாண்டாகவோ, கோல்டு காயினாகவோ வாங்கினாலும் சிறிது லாபம் மட்டுமே கிடைக்கும். கடந்த 15 வருடங்களில் தங்கத்தை விட பங்குச் சந்தை இரு மடங்கு வருமானம் தந்துள்ளது. நம் சொந்தத் தேவைக்காக தங்கத்தை நகைகளாக வாங்கிய பின், மிச்சமுள்ள நம் சேமிப்பை நிதி சார்ந்்த முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். எனவே, தங்க முதலீட்டில் நாட்டம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பாண்ட் திட்டத்தை பரிசீலிக்கலா
மக்களுக்கு லாபமா?
வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.
“பெரும்பாலானவர்கள் தங்கம் வாங்குவதை முதலீடாகவே பார்ப்பதால் கோல்டு பாண்டு திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், டீமேட் மற்றும் காகிதம் என இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும்போது மக்களால் அதை எளிதாக வாங்க முடியும. இதுவரை முதலீட்டாளர்களுக்கு கோல்டு இடிஎஃப் திட்டம் டீமேட் வடிவில் மட்டும்தான் கிடைத்தது. இதனால் படிக்காத மற்றும் ஆன்லைனில் அதிக பழக்கம் இல்லாதவர்கள் வாங்குவதில் சிக்கல் இருந்தது. ஆனால், அரசின் இந்த கோல்டு பாண்ட் திட்டத்தில் அந்த சிக்கல் இல்லை. மேலும், கோல்டு இடிஎஃப் திட்டத்தில் வாங்கப்படும் யூனிட்டுகளின் விலையில் தங்கத்தின் விலை மட்டும்தான் பிரதிபலிக்கும். அதுதவிர வேறு எந்தவிதமான கூடுதல் சலுகையும் கிடையாது. ஆனால், கோல்டு பாண்ட் திட்டத்தில் தங்கத்தின் விலை மட்டும் இல்லாமல் கூடுதலாக 2.75 % வட்டியும் கிடைக்கும். மேலும், இடிஎஃப் திட்டங்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுபவை. கோல்டு பாண்ட் திட்டம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டம் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கும்.
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
Monday, 9 November 2015
Happy depavali
Happy Depavali for all country people's.
தீபாவளி நாளில் இந்தியா உலக பொருளாதார வல்லரசாக வாழ்த்துக்கள்
சிவகாசியில் தீபாவளி கொண்டாடும் பட்டாசுத் தொழிலாளர் -ஒரு பார்வை
சிவகாசியில் தீபாவளி கொண்டாடும் பட்டாசுத்தொழிலாளர் - ஒரு பார்வை
தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் மக்கள் அதனை தயாரிக்கும் மக்களின் நிலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்திருந்தாலும் நினைக்க நேரமில்லை.பட்டாசுத்தொழிலாளர்கள் பல உயிர்களை இழந்து உலக மக்களுக்காக பட்டாசு தயாரிக்கிறார்கள்.தங்கள் குடும்பத்தில் ஒரு http://sivakasiteacherkaruppasamy.blogspot.com சிலரை இழந்து அவர்களை நினைத்து கண்ணீருடன் கொண்டாடுபவர்கள் பலர். சொந்த ஊரில் இருந்தால் இழந்தவர்கள் ஞாபகம் வரும் என்று வெளியூர் சென்று தீபாவளியை சிலர் கொண்டாடவர்.ஆண்டு முழுவதும் உழைத்து முதலாளிகள் கொடுக்கும் டிப்ஸை(போனஸ்) வாங்கி போலியாக தீபாவளி பலர் கொண்டாடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் முதலிபட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு பின் தொழிலாளர்களுக்கு எந்த விதமான சம்பளம் உயர்வும் இல்லை போனஸ் வழங்குவதிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள்.சிறு பட்டாசு ஆலைகள் கூட தொழிலாளர்களுக்கு சாதகமான சம்பளம் போனஸ் வழங்கும் நிலையில் கார்ப்பரேட் மனப்பான்மையில் செயல்படும் பெரிய கம்பெனிகள் கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றன.பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் சிறிய மற்றும் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளை நசுக்கும் மனப்பான்மையில் செயல்படுகின்றன.பெரிய தொழிற்சாலை முதலாளிகள் சீனா போன்ற நாடுகளில் தொழிற்சாலை இருப்பதாக கூறிக்கொண்டு பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றன.பட்டாசுகளை விற்பனை செய்வதிலும் இனம் மொழி பார்த்து ஆர்டர் கொடுக்கின்றனர்.குறிப்பிட்ட இனம் சார்ந்த குழுக்கள் அமைத்து அவர்களுக்கே ஆர்டர் வழங்குகின்றனர்.இதனால் சிறிய. கம்பெனி தொழிலாளி பாதிக்கப்படுகின்றனர்.சிவகாசியில் 680 பட்டாசு ஆலைகள் உள்ளன அவற்றுள் பெரும் முதலாளிகளிடம் 250 ஆலைகளஉள்ளன.ஆனால் சிறிய ஆலைகள் அனைத்தும் பெரிய ஆலைகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வெண்டிய சூழல் .Standard,காளிஸ்வரி சோனி சுப்ரிம் காரனேசன் கிருஷ்னா எ ஆர் டி ம்போ கேஆர்எஸ் அணில் போன்ற ஆலைகள் கட்டுப்பாட்டில் மற்ற ஆலைகள் உள்ளன.சிலர் CITU போன்ற சங்கங்களில் இணைந்து போராடி சம்பள உயர்வு பெற்றாலும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களையே வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர் பெரிய கம்பெனிகள்.பள்ளி செல்லும் குழந்தைகளும் விடுமுறையில் வேலைக்கு சென்று சிலர் பட்டம் பெற்றும் சிலர் பட்டம் பெறாமலும் பட்டாசு ஆலைக்கே வருகின்றனர்.சில பெற்றோர் தங்களை பட்டாசு http://sivakasipeople.blogspot.com அதிபர்களிடம் அடமானமாக வைத்து குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.பின்பு அதே ஆலைக்கு உரிமையோடு வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.ஆதலால் தாங்கள் வாங்கும் பட்டாசு கடைக்காரரிடம் இந்த பட்டாசை தயாரித்த தொழிலாளிக்கு முறையான ஊதியம் போனஸ் வழங்கப்பட்டதா என்றும் குழந்தை தொழிலாளர் தயாரிக்காத வெடியா என கேட்டு வாங்குங்கள்.
Sunday, 8 November 2015
வீட்டுக்கடன்....சுகமா? சுமையா?
வீட்டுக்கடன் ..... சுகமா?..சுமையா?
வீட்டுக் கடன்... சுகமா, சுமையா? நம் வாழ்க்கையில் வீடு என்பது இன்றியமையாதது. இந்த வீட்டை மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்குவது என்பது நம்மில் 90 சதவிகிதம் பேருக்கு முடியாத காரியம். காரணம், சொத்தின் விலை, அந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பணத்தை மொத்தமாகச் சேர்த்துவைத்து வீடு வாங்குவது என்பதும் இயலாத காரியம். காரணம், வீடு வாங்குவதற்கான தொகையைச் சேர்க்க எப்படியும் பத்தாண்டு களாகிவிடும். ஆனால், பத்தாண்டு கழித்து வீட்டின் விலை இருமடங்காகி இருக்கும். பிறகு எப்படிதான் ஒரு மனிதனுக்கு அந்தஸ்தத்தைக் கொடுக்கும் வீட்டை சொந்தமாக்கிக் கொள்வது என்கிறீர்களா? அதற்கு ஒரே வழி வீட்டுக் கடன்தான். இந்த வீட்டுக் கடன் 15 - 20 ஆண்டுகளுக்குமுன் அவ்வளவு சுலபமாக கிடைக்காது.http://sivakasiteacherkaruppasamy.blogspot.com அரசு ஊழியர்கள் மற்றும் லிமிடெட் கம்பெனி ஊழியர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கின. அதுவும் வாங்கிய கடனை 10 - 15 வருடங்களுக்குள் கட்டியாக வேண்டும். வட்டி விகிதமும் 13 - 15% என்பதுபோல் அதிகமாக இருந்தது. சுலப வீட்டுக் கடன்..! இன்றைக்கு இந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. வீட்டுக் கடன் என்பது கடனை திரும்பச் செலுத்தும் தகுதி உள்ள அனை வருக்கும் தாராளமாகக் கிடைக்கிறது. வீட்டுக் கடன் வழங்க என்றே பிரத்யேக வீட்டு வசதி நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டன. மேலும், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தந்துவருகின்றன. தனியார் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வீடு தேடி வந்துகூட கடன் வழங்கத் தொடங்கியிருக்கின்றன. வங்கிகள் தாராளமாக வீட்டுக் கடன் வழங்க முக்கிய காரணம். வீட்டுக் கடன் வாங்குபவர்களில் 98% பேர் கடனை முறையாகச் செலுத்திவிடுவதாகும். வீட்டுக் கடனுக்கான வட்டியும் 10.10 சதவிகித அளவுக்குக் குறைந்துள்ளது. விரைவில் இன்னும் குறையும் என்கிற நிலை காணப்படுகிறது. மேலும், வீட்டுக் கடனை திரும்பக் கட்ட 20 - 30 ஆண்டுகள்கூட அனுமதிக்கப்படுகிறது. இதற்குமுன் 10-15 வருட தவணையாக வீட்டுக் கடன் வழங்கிய வங்கிகள் அதனை 30 வருடங்களாக உயர்த்தியதன் காரணம், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மனை விலை உயர்வு, கூலி உயர்வு போன்றவைதான். அதாவது, வீடு கட்டுவது / வாங்குவது பொதுமக்களுக்கு கனவாகிவிடக்கூடாது என்பதற்காகவும், தங்களின் வணிகத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், கடன் தவணை காலத்தை 30 ஆண்டுகள் வரை வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. இதனால் இஎம்ஐயாக கட்டும் பணம் கணிசமாக குறைவாக இருப்பதால், சுலபமாக பலராலும் வீடு வாங்க முடிகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்கள், பணியில் சேர்ந்து சில வருடங்களிலே வீட்டுக் கடன் வாங்கி, சொந்த வீடு வாங்க களமிறங்கிவிடுகிறார்கள். இதற்கு காரணங்கள், வருமான வரிச் சலுகை, குடியிருக்கும் இடத்தின் வாடகையைத் தவிர்ப்பதாக இருக்கிறது. இரு வித வட்டி..! பொதுவாக, வங்கிகள் இரண்டு விதமான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. ஒன்று, நிலையான வட்டி விகிதம் (ஃபிக்ஸட் ரேட்). இதில், கடனுக்கான வட்டி விகிதம் 3 - 5 ஆண்டுகள் வரை நிலையானதாக இருக்கும். அதன்பிறகு அப்போதைய கடன் சந்தை நிலைக்கு ஏற்ப மாறும். இதற்குமுன் இந்த நிலையான வட்டி விகிதம் என்பது முழுக் கடன் காலத்துக்கும் அனுமதிக்கப்பட்டது. அடுத்து, மாறுபடும் வட்டி விகிதம் (ஃப்ளோட்டிங்). இதில் கடனுக்கான வட்டி விகிதம், கடன் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும். அதாவது, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். இவ்வாறு வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும்போது கடன் மாத தவணை அதிகரிக்கும் அல்லது குறையும். தற்போதையச் சூழ்நிலையில், நிலையான வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதத்தைவிட 1.5-2% அதிகமாக இருப்பதால் மாறுபடும் வட்டி விகிதமே லாபகரமாக இருக்கும். தவிர, விரைவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால் மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. கடனை திரும்பக் கட்டும் கால தேர்வு..! வீட்டுக் கடன் சுமையா அல்லது சுகமா என்று கேட்டால், நீங்கள் கடனை திரும்பக் கட்ட தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து பதில் இருக்கும். உதாரணத்துக்கு அடுத்து வரும் அட்டவணையைப் பாருங்கள். கடன் தொகை ரூ.25 லட்சம், வட்டி விகிதம் 10% ரூ.25 லட்சம் கடனை 10 ஆண்டுக்குள் திரும்பக் கட்டுவதாக இருந்தால், மாத தவணை ரூ.33,037. இதுவே, 30 ஆண்டு களில் திரும்பக் கட்டுவதாக இருந்தால், மாத தவணை ரூ.21,940. அதாவது, இரண்டுக்குமான வித்தியாசம் ரூ.11,000. அந்த வகையில் தவணைக் காலத்தை வருமானத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உங்களின் சம்பளம் உயரும்போது, தவணையை அதிகரித்து கட்டுவதன் மூலம் தங்களின் கனவு இல்லத்தைப் பெரிய சுமையில்லாமல் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். அதேநேரத்தில், கடனை அதிக ஆண்டுகளில் கட்டும்போது வட்டிக்கு செல்லும் தொகை மிக அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு, ரூ.25 லட்சம் கடனை பத்தாண்டுகளில் திரும்பக் கட்டினால் வட்டிக்கு செல்வது ரூ.14.64 லட்சமாக இருக்கும். இதுவே 30 ஆண்டுகளில் கடனை கட்டினால் வட்டிக்கு மட்டும் செல்வது ரூ.54 லட்சம். அதாவது, வாங்கிய கடனைவிட வட்டிக்கு அதிக தொகை செல்கிறது. ஆனால், நடைமுறையில் இதனைவிட வட்டி குறைவாக செல்ல அதிக வாய்ப்புள்ளது. காரணம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை மேம்பட்டு வருவதால், கடனுக்கான வட்டி விகிதம் தற்போதைய 10% என்பது 7.5% அளவுக்குகூட குறைய வாய்ப்புள்ளது. 2000-ல் 13 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி, 2005 வாக்கில் 7.5% அளவுக்கு குறைந்தது பலருக்கும் தெரிந்த உண்மை. வீட்டுக் கடன் வட்டி அதிகரிப்பு..! வீட்டுக் கடன் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பைப் பார்ப்போம். உதாரணத்துக்கு, விநாயகம் என்பவர் 25 லட்சம் ரூபாய், 10% வட்டிக்கு, 15 வருடத்தில் திரும்பச் செலுத்துவது போல வீட்டுக் கடன் பெறுகிறார். இந்தக் கடனுக்கு மாத தவணையாக அவர் 26,865 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் தவணை தொகையில் வட்டிக்கு செல்வது ரூ.20,833, அசலுக்கு செல்வது ரூ.6032 என்பதாக இருக்கும். இரண்டாம் தவணையில், பாக்கி உள்ள கடன் தொகையான ரூ.24,93,968-க்கு அவர் வட்டி செலுத்த வேண்டும். அதற்கு அவர் செலுத்தும் மாத தவணை தொகையான ரூ.26,865-ல் ரூ.20,783 வட்டிக்கும், ரூ.6,082 அசலுக்கும் செல்லும். ஒவ்வொரு மாதமும், வங்கியானது கடன் தொகையில் முதலில் வட்டியைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையையே அசலில் கழிப்பார்கள். ஆகவே, வட்டி தொகையானது கடனுக்கான வட்டியின் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது. இவருக்கு வட்டி விகித அதிகரிப்பால் (அதாவது, 10%-லிருந்து 10.5% உயர்வால்) அவர் செலுத்த வேண்டிய மாத கடன் தொகையான ரூ.26,865-ல் வட்டி - ரூ.21,787, அசல் - ரூ.5077-ஆக இருக்கும். மேலும், வட்டி அதிகரிப்பால் வீட்டுக் கடனை செலுத்தும் தவணைக் காலமும் அதிகரிக்கும். இது வட்டி விகித அதிகரிப்பைப் பொறுத்து சில மாதங்களில் இருந்து சில ஆண்டுகள் வரை நீளும். சுலபமாக கடனை அடைக்க! வீட்டுக் கடனை சுலபமாக அடைக்கவும், வட்டியைக் கணிசமாக குறைக்கும் வழிகளை கீழே தந்துள்ளோம். வீட்டுக் கடனை சுலபமாக அடைக்க வழிவகைகள் இதோ: * வீட்டுக் கடனுக்கான தவணைக் காலம் 15 வருடம் என்பது சிறந்ததாக இருக்கும். இப்படி வாங்கும் கடனை பெரும்பாலோர் 10-12 வருடத்துக்குள் அடைத்து வட்டியைப் பெருமளவு மிச்சப்படுத்திவிடுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. * போனஸ், சம்பள உயர்வு மூலம் கூடுதல் பணம் கிடைக்கும்போதெல்லாம், குறிப்பிட்ட தொகையைக் கட்டினால், அசலில் கணிசமான தொகை உடனடியாக குறைந்துவிடும். அப்போது கடனும் விரைந்து முடிந்துவிடும். http://tamilnumaralogy.blogspot.com * வட்டி விகிதம் மாறும்போது, தவணை தொகையை அதிகரிப்பது நல்லது. தவணை தொகையை அதிகரிக்கவில்லை எனில், வட்டி அதிகமாகச் செல்லும். * ஒருவரது வருமானத்தின் வளர்ச்சிக்கேற்ப தவணைத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து கட்டுவது லாபகரமாக இருக்கும். 2014-15 மத்திய பட்ஜெட்டில் திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடன் அசலுக்கு ரூ.1.5 லட்சம், வட்டிக்கு ரூ.2 லட்சம் என வரிச் சலுகை அதிகரிக்கப் பட்டிருப்பதால், இப்படி கூடுதலாக கட்டும் தொகைக்கும் வரிச் சலுகை பெறலாம். வீட்டுக் கடன்தான் பெஸ்ட்! வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவது எப்படி லாபகரமாக இருக்கும் என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். கடந்த 2000-ம் ஆண்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் என்பவர் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே அரை கிரவுண்ட் (1200 சதுர அடி) மனை வாங்கி, அதில் 840 சதுர அடியில் வீடு கட்டினார். இவர் மனை மற்றும் வீடு கட்ட ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் வாங்கினார். மனை சதுர அடி விலை 55 ரூபாய். மனை பத்திரப்பதிவு செலவுடன் ரூ.71,500. வீடு கட்ட 840 சதுர அடிக்கு சதுர அடி 500 ரூபாய் வீதம் ரூ.4,20,000. மனை விலை, வீடு கட்டுமான செலவு, சுற்றுச்சுவர், மாடிப் படிக்கட்டு, செப்டிக் டேங்க், ஓவர் டேங்க் கட்டுமானம் எல்லாம் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினார். டவுன் பேமென்ட் ஆக ரூ.1 லட்சம் கையிலிருந்து போட்டார். அப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி 12.5 சதவிகிதமாக இருந்தது. www/http://sivakasipeople.blogspot.com 15 ஆண்டுகளில் திரும்பக் கட்டும் கடனுக்கு மாத தவணை ரூ.6,165. அப்போது அவரது சம்பளம் ரூ. 15,000. வீட்டுக் கடன் வட்டி 12.5 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக குறைந்து, 2005-ல் 7.5% ஆனது. இவர் 2005-ம் ஆண்டு வரைக்கும் மாத தவணையாக ரூ.4,62,375 கட்டினார். இதில் வட்டி விகித குறைவால் அசலில் ரூ. 1.5 லட்சம் குறைந்து, மீதி கட்ட வேண்டிய தொகை ரூ.3.5 லட்சமானது. இந்த நிலையில் சுரேஷின் சம்பளமும் கூடி இருந்தது. மீதமுள்ள கடனை 7.5% வட்டியில் 5 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி கடனை மாற்றியமைத்தார் சுரேஷ். அப்போது மாத தவணை ரூ.7015 ஆனது. இப்படி 2009 டிசம்பரில் முழுக் கடனையும் அடைத்துவிட்டார். இந்த ஐந்தாண்டுகளில் அசலும் வட்டியுமாக சேர்த்து சுரேஷ் கட்டியது ரூ.4,20,800. அதாவது, ரூ.5 லட்சம் வீட்டுக் கடனுக்கு அவர் ரூ.8,83,175 கட்டி உள்ளார். அவர் ஒரு நிதி ஆண்டில் அசலில் ரூ.1 லட்சம் (2000-01 மட்டும் ரூ.70,000) வரையும் வட்டியில் ரூ.1.5 லட்சம் (2000-01 மட்டும் ரூ.75,000) வரை வரிச் சலுகை பெற்றிருக்க முடியும். சுரோக்கு இதனைவிட குறைவான தொகையை இந்த 10 ஆண்டுகளிலும் சென்றதால், அவர் முழு வரிச் சலுகையும் பெற்றிருப்பார். முதல் ஐந்தாண்டுகளில் அவர் 10% வரி வரம்பில் வந்ததால் ரூ.46,230, அடுத்த ஐந்தாண்டுகளில் 20% வரி வரம்பில் வந்ததால் அவர் ரூ.84,000-ஆக மொத்தம் 1,30,230 வரிச் சலுகை பெற்றிருப்பார். இந்த வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்தால், அவர் வீட்டுக் கடனுக்கு செலுத்திய தொகை ரூ. 7,52,945தான் டவுன் பேமென்ட் ரூ. 1 லட்சம் சேர்த்தால் 8,52,945 ரூபாய். சுரேஷ் 2000-ல் வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டின் மதிப்பு (மனையுடன் சேர்த்து) ரூ.5 லட்சம். இன்றைக்கு அவர் வீடு வாங்கிய இடத்தில் சதுர அடி விலை ரூ.1,400. மனையின் விலை மட்டும் ரூ. 16.80 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் புதிதாக வீடு கட்ட வேண்டும் எனில், ஒரு சதுர அடிக்கு செலவு ரூ.1,400. சுரேஷ் வீடு பழையது என்பதால் அதனை கட்ட சதுர அடிக்கு ரூ.1,100 ஆகும் என பொறியாளர்கள் மதிப்பிடுகிறார்கள். அந்த வகையில் 840 சதுர அடி வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.9,24,000. ஆக, வீட்டின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சம். அவர் வீட்டை இன்றைக்கு வாடகைக்கு விட்டால் தாராளமாக மாதம் ரூ.10,000 கிடைக்கும். http://sivakai.blogspot.blogspot.com அந்த வீட்டில் அவர் குடியிருப்பதால், அவருக்கு வாடகை செலவு இல்லை. அதாவது, ரூ.8.50 லட்சம் செலவில் ரூ.26 லட்சம் சொத்துக் கிடைத்திருக்கிறது. கூடவே, குடியிருக்க வீடும் கிடைத்திருக்கிறது. கடன் வாங்கும்போது, நம் பணம் பெருமளவில் வட்டியாகப் போகிறதே என்று நினைத்து கவலைப்படலாம். ஆனால், வேகமாக அடைத்துவிட்டால், வீடு எளிதில் நமக்கு சொந்தமாகிவிடும். அதேநேரத்தில், உங்களுக்கு வீட்டுக் கடன் மூலம் அசல் மற்றும் வட்டியில் வரிச் சலுகை தேவை என்றால், உரிய மாத தவணையைக் கட்டி வீட்டுக் கடனை சரியான நேரத்தில் அடைத்துக்கொள்வது லாபகரமாக இருக்கும்.